Oho Padinar Kavignar Padinar

Advertisement

Song Lyrics
Advertisement

ஓஹோ பாடினார் கவிஞர் பாடினார்
மானென்றார் புள்ளி இல்லை
மயிலென்றார் தோகை இல்லை
தேனென்றார் மீனென்றார் தெரிந்து சொன்னாரா
ஓஹோ ஹோ பாடினார் கவிஞர் பாடினார்……

ஓஹோ பாடினார் கவிஞர் பாடினார்
காளை என்றார் கொம்பில்லை
யானை என்றார் தந்தமில்லை
சிங்கமென்றார் வீரனென்றார் தெரிந்து சொன்னாரா
ஓஹோ ஹோ பாடினார் கவிஞர் பாடினார்……

கன்னியரைப் பஞ்சவர்ணக் கிளிகள் என்றார்
கன்னியர்கள் கோவைப்பழம் தின்பதில்லையே
ஆடவரைப் புலிகளென்று பாடி வைத்தாரே – புலி
ஆடு தேடி காடு தேடி ஓடவில்லையே

அன்னநடை நடக்கவில்லை…….
கண்ணிருந்தும் காணவில்லை……
கன்னியர்க்கு மென்மை இல்லை ……
சொன்னவர்க்கு மூளை இல்லை……..(காளையென்றார்)

அச்சமில்லை நாணமில்லை அடக்கமில்லையே –இதில்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பேதமில்லையே
பெண் குலத்தை கேலி செய்தல் வீரமில்லையே –இதில்
பெண்களுக்கும் உங்களுக்கும் பேதமில்லையே

வெற்றி கொள்ளும் ஆண்மையன்றோ…..
பெற்றெடுக்கும் பெண்மையன்றோ……
ஆண்மையின்றிப் பெண்மை இல்லையே…..
பெண்மையின்றி ஆண்மை இல்லையே……

மானென்றால் பார்வை சொன்னார்
மயிலென்றால் சாயல் சொன்னார்
தேனென்றால் இனிமை சொன்னார் தெரிந்து கொள்வோமே
ஓஹோ ஹோ பாடினார் கவிஞர் பாடினார்……

Advertisement
Advertisement
READ  Konjivarum Nenjil Indru