Advertisement
Song Lyrics
Advertisement
சுகம் சுகம் இது நான் சுவைத்து ரசிப்பது
தேன் பழம் பழம் இது என் பசியை வளர்ப்பது
கண்ணா உன்னால் கண்டேன் நன்னாள்
கண்ணே உன்னால் கண்டேன் பொன்னாள் (சுகம்)
மழைத்தட்டு மேகங்கள் குடை ஒன்று போட
மணிவண்ண தாரகை தீபங்கள் ஆக
குலமங்கை பொன்மஞ்சள் கோலம் போட
குளிர்க்கொண்ட பூந்தென்றல் வாழ்த்துப்பாட
துணை வந்தது இடம் தந்தது சுகம் கொண்டு ஆட (சுகம்)
மணவறை அலங்காரம் கலையாத முன்னே
மலர்மஞ்ச பள்ளியில் விளையாடு கண்ணே
கனவினில் கண்டது கை வந்த பின்னே
கைகளில் ஆடட்டும் காவிய பெண்ணே
மதன் அம்புகள் பதம் பார்த்தன இதமாக என்னை (சுங்கம்)
Advertisement
Advertisement