Theena Moona Kaana Enga

Advertisement

Song Lyrics
Advertisement

தீனா மூனா கானா எங்க தீனா முனா கானா –அப்பிடின்னா
திருக்குறள் முன்னணி கழகம் –ஓஹோ
தீனா மூனா கானா எங்க தீனா முனா கானா
அறிவினை பெருக்கிடும் உறவினை வளர்த்திடும்
தீனா மூனா கானா எங்க தீனா முனா கானா

பகுத்தறிவோடு நாட்டினர் வாழ்க
திருக்குறள் தந்தார் பெரியார் வள்ளுவப் பெரியார்
அந்த பாதையில் நாடு சென்றிடவே
வழி வகுப்பதும் அதன்படி நடப்பதும் எங்கள்
தீனா மூனா கானா எங்க தீனா முனா கானா

கருப்பு செகப்பு என்ற பேதத்தை நீக்கும்
தலை கனத்தை குறைத்து நல்ல தன்மை உண்டாக்கும்
கள்ளர் மறவரோடு பள்ளு பறைகள் என
உள்ள பேதங்களை ஒழித்து கட்டும் எங்கள்
தீனா மூனா கானா எங்க தீனா முனா கானா

காந்தியடிகளின் அஹிம்சையும் வள்ளுவன்
கருணையும் ஒன்றென சொல்வதும்
சாம்பசித்தார்த்தன் கொள்கையும் திருக்குறள்
தர்மமும் ஒன்றென கொள்வதும் எங்கள்
தீனா மூனா கானா எங்க தீனா முனா கானா

தனையன்மாருக்கொரு தந்தையைப்போலே
தங்கைகளுக்கொரு தமக்கையைப்போலே
தம்பிமாருக்கொரு அண்ணாப்போலே
தமிழன் பெருமைதனை நிலை நாட்டும்

தீனா மூனா கானா எங்க தீனா முனா கானா
தீனா மூனா கானா எங்க தீனா முனா கானா

Advertisement
Advertisement
READ  Naan Yaar Naan Yaar