Thumbaipoo Mugathil Thulasi

Advertisement

Song Lyrics
Advertisement

தும்பைப்பூ முகத்தில் துளசி பூ விழிகள்
துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள்
குவளைப்பூ ஒளியில் குங்குமச் சிமிழ்கள்
குங்குமசிமிழில் குறுநகை கோடி

குறுநகை கோடி ஒரு நகை கூடி
ஒரு நகை கூடி உன்னிதழ் தேடும் ஆ…..ஆ…..(தும்பை)

தாழம்பூ கையில் செங்காந்தள் விரல்கள்
செங்காந்தள் விரல்களில் சிறு முல்லை நகங்கள்
சிறுமுல்லை நகத்தில் செவ்வந்திப்பூக்கள்
செவ்வந்திப் பூவில் செந்தேனின் சுவைதான்

செந்தேனின் சுவைதான் சீரான சுவைதான்
மாறாத இன்பத்தை தருகின்ற சுவைதான் ஆ…ஆ…(தும்பை)

ஈருள்ளம் கலந்த இல்லத்தில் புகுந்தோம்
இல்லத்தில் புகுந்து இன்பத்தில் மிதந்தோம்
இன்பத்தில் மிதந்து உன் வரவை கண்டோம்
உன் வரவைக் கண்டு உல்லாசம் கொண்டோம்

உல்லாசம் கண்டு உருவத்தைக் கண்டோம்
உருவத்தை கண்டு உலகத்தை மறந்தோம்….ஆ…ஆ…(தும்பை)

Advertisement
Advertisement
READ  Azhagiya Kamalathil